திருச்சி காவிரி பாயும் நகரம். நான் பயின்ற நகரம். அங்கு மகளிர் கல்வியில் பணியாற்றி வரும் காவேரி மகளிர் கல்லூரித் தமிழ்த்துறை வரலாற்று நோக்கில் தமிழ் இலக்கியவியல் என்னும் பொருண்மையில் மூன்றுநாள் கருத்தரங்கு ஒன்றினைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கையில் நடத்தியது. ஆய்வறிஞர் முனைவர் மாதையன், முனைவர் சுயம்பு ஆகியோர் உரையாற்றிய அக்கருத்தரங்கில் வரலாற்றியல் நோக்கில் குறுந்தொகை உரைகள் என்னும் தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பு அக்கல்லூரிப் பேராசிரியர் மதிப்பிற்குரிய முனைவர் நித்தியா அறவேந்தன் அவர்களாலும், துறைத்தலைவர் முனைவர் இராமலட்சுமி அவர்களாலும் வாய்த்தது. அக்கருத்தரங்கில் இலக்கணம் தொடர்பான சில கலைச் சொற்களை மையமிட்டு மாணவியர் வரைந்திருந்த கோலக் காட்சிகள் குறிப்பிடத்தக்கவை. அக்கருத்தரங்கின் காட்சிகள் இவை.
அழைப்பிதழ்
அழைப்பிதழ்
அழைப்பிதழ்
அழைப்பிதழ்
முனைவர் பெ. மாதையன் அவர்கள் உரையாற்றும் காட்சி
முனைவர் ஆ. மணி அவர்களின் உரை: வரலாற்றியல் நோக்கில் குறுந்தொகை உரைகள்
பங்கேற்பாளர் பகுதியில் ஈ.வே.ரா. கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வாசுதேவன் அவர்கள்.
மாணவியர் கைவண்ணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக