திருச்சி, பாரதிதாசன் பல்கலைக் கழகத் தமிழியல்துறையும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து தொல்காப்பியக் கவிதையியலும் சங்க இலக்கியங்களும் என்னும் பொருண்மையில் பத்து நாள் பயிலரங்கு ஒன்றினை 22.03.2014 முதல் 31.03.2014 வரை நடத்துகின்றன. தமிழியலில் ஆய்வும் தோய்வும் பயிற்சியுமுடைய பேராசிரியர் முனைவர் உ. அலிபாவா அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றார்.
தொல்காப்பியத்தின் கவிதையியல் சிந்தனைகள் தமிழ்ச்சூழலில் போதிய அளவில் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. தொல்காப்பியருக்குப் பின்னர் வந்த இலக்கண நூலாசிரியர்களும் உரையாசிரியர்களும்கூடத் தொல்காப்பிய மரபுகளைப் போற்றியதாகத் தெரியவில்லை. இச்சூழலில் தொல்காப்பியக் கவிதையியலைச் சங்கப் பாடல்களுடன் ஒப்பிட்டு நோக்கும் வகையில் பயிலரங்கை நடத்திவரும் முனைவர் உ. அலிபாவா அவர்கள் பாராட்டுக்குரியவர். அப்பயிலரங்கில் பேரன்புக்கும் பெருமதிப்பிற்குமுரிய மயிலம் தமிழ்க்கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் இரா. இலட்சாராமன் ஐயா அவர்கள் தொல்காப்பிய மெய்ப்பாடுகள்; சங்க அகப்பாடல்களில் ஒப்புமை மெய்ப்பாடுகள் ஆகிய இரு தலைப்புக்களிலும், முனைவர் ஆ. மணி அவர்கள் தொல்காப்பியக் கைக்கிளையும் சங்க அகப்பாக்களும்; தொல்காப்பிய வனப்பில் அழகு ஆகிய இரு தலைப்புக்களிலும் உரையாற்றினர். அப்பயிலரங்கின் காட்சிகள் இவை.

பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் உ. அலிபாவா அவர்களின் அறிமுகவுரை.
முனைவர் இரா. இலட்சாராமன் அவர்களின் உரை : தொல்காப்பிய மெய்ப்பாடுகள்.
முனைவர்ப் பட்ட ஆய்வாளர் இமாகுலேட் அவர்களின் நன்றியுரை.
முனைவர் இரா. இலட்சாராமன் அவர்களின் உரை : சங்க அகப்பாடல்களில் ஒப்புமை மெய்ப்பாடுகள்.
முனைவர் ஆ. மணி அவர்களின் உரை : தொல்காப்பியக் கைக்கிளையும் சங்க அகப்பாக்களும்.
பயிலரங்கச் சுவைஞர் பகுதியில் முனைவர் இரா. இலட்சாராமன் ஐயா அவர்களும், முனைவர் உ. அலிபாவா அவர்களும்.
முனைவர் ஆ. மணி அவர்களின் உரை : தொல்காப்பிய வனப்பில் அழகு.
முனைவர்ப் பட்ட ஆய்வாளர் அய்யனார் அவர்களின் நன்றியுரை.
பயிலரங்கச் சுவைஞர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக