ஞாயிறு, 16 மார்ச், 2014

காந்தி கிராமக் கிராமியப் பல்கலைக் கழகக் கருத்தரங்கு (14.02.2014)

   காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராமக் கிராமியப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்துச் சமூகவியல், பண்பாட்டியல், மொழியியல் நோக்கில் கலித்தொகை என்னும் பெயரிய மூன்று நாள் கருத்தரங்கு ஒன்றினைப் பிப்ரவரி 12 முதல் 14 வரை (2014) நடத்தின. அக்கருத்தரங்கினை அண்மையில் புதுதில்லிக் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் இளம் தமிழறிஞர் விருது பெற்ற பேராசிரியர், முனைவர் சி. சிதம்பரம் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார். செவ்வியல் இலக்கண, இலக்கியங்களில் குறிப்பிடத் தகுந்த அளவில் மரபு மாற்றங்களையும்,  சிந்தனை மாற்றங்களையும் பெற்றுள்ள நூலாகிய கலித்தொகை நுண்ணிய ஆய்வுகளைப் பெற வேண்டிய ஒரு நூலாகும். எனினும், அந்நூல் தமிழ் ஆய்வுலகில் போதிய கவனத்தைப் பெற்றுள்ளதாகவோ, செவ்விய ஆய்வுகளைப் பெற்றுள்ளதாகவோ கூற இயலவில்லை. அத்தகைய ஒரு நூலைக் கருத்தரங்கப் பொருளாகக் கொண்டமைக்காகக் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி. சிதம்பரம் அவர்கள் பாரட்டப்பட வேண்டியவராவார்.
         கலித்தொகைக் கருத்தரங்கில் 14.02.14 வெள்ளியன்று முற்பகலில் நடைபெற்ற அமர்வில் முனைவர் வ. தனலட்சுமி அவர்கள் கணினி மொழியியல் நோக்கில் கலித்தொகை என்னும் தலைப்பிலும், முனைவர் அ. அறிவுநம்பி அவர்கள் கலித்தொகைப் பாடல்களில் அகமரபுகள் என்னும் தலைப்பிலும், முனைவர் வ. இராசரெத்தினம் அவர்கள் கலித்தொகையும் கைக்கிளையும் என்னும் தலைப்பிலும், முனைவர் ஆ. மணி அவர்கள் கலித்தொகையில் புறச்செய்திகள் என்னும் தலைப்பிலும் உரையாற்றினர். அக்கருத்தரங்கின் காட்சிகள் இவை:

முனைவர் வ. தனலட்சுமி அவர்களின் உரை: கணினி மொழியியல் நோக்கில் கலித்தொகை
முனைவர் வ. இராசரெத்தினம் அவர்களின் உரை:  கலித்தொகையும் கைக்கிளையும்.
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி. சிதம்பரம் அவர்களின் விருந்தினர் அறிமுகவுரை.
முனைவர் ஆ. மணி அவர்களின் உரை:  கலித்தொகையில் புறச்செய்திகள்.
ஆய்வாளர் வினாக் கேட்டல்.

கருத்தரங்கச் சுவைஞர்.
 அழைப்பிதழ்
அழைப்பிதழ்

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...