பிறமொழிச் சொற்களுக்குரிய தமிழ்ச்சொற்களைத் தரும் முயற்சியின் தொடக்கம் இது. முதலில் விக்கிப்பீடியாவில் தரப்பட்டுள்ள சொற்களும் அவற்றுக்குத் தரப்பட்டுள்ள தமிழ்ச்சொற்களும் இங்குத் தரப்பட்டுள்ளன். இவற்றுள் சில இன்னும் மேம்படுத்தப்படவேண்டியன. பின்னர் இவை பற்றிய கருத்துக்களைத் தரலாம் என நினைக்கின்றேன்.
தமிழ்ச்சொல் - பிறமொழிச்சொல்
- நகர்பேசி - Cellular Phone
- நகர் நிலையம் - Mobile Station; same as Cellular Phone
- தொலைபேசி இணைப்பகம் - Telephone Exchange
- குறியீடு பிரிப்பு பன்னணுகல் முறை - Code Division Multiple Access
- வானொலிக் குறிகைகள் - Radio Signals
- இலக்கப்படுத்தப்பட்ட குரல் தரவு - Digital Voice Data
- பரவல் குறியீடு - Spreading Code
- அலையெண் கற்றையகலம் - Frequency Bandwidth
- பரவல் நிறமாலை தொழில்நுட்பம் - Spread spectrum technology
- உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு - Global System for Mobile communication அல்லது GSM
- காலப்பிரிப்பு பன்னணுகல் - Time Division Multiple Access
- வானலைச் செலுத்துப்பெறுவி - Radio Transceiver
- காட்சித் திரை - Display
- இலக்கக் குறிகைச் செயலி - Digital Signal Processor அல்லது DSP
- சூட்டிகையட்டை - Smart Card
- சந்தாதாரர் அடையாளக்கூறு - Subscriber Identification Module அல்லது SIM
- பன்னாட்டு நகர்சாதன அடையாளம் - International Mobile Equipment Identification - IMEI
- பன்னாட்டு நகர்சந்தாதாரர் அடையாளம் - International Mobile Subsriber Identity - IMSI
- தள நிலையம் - Base Station
- தள செலுத்துப்பெறு நிலையம் - Base Transceiver Station - BTS
- தள நிலைய இயக்ககம் - Base Station Controller - BSC
- வானலைவரிவை துவக்கம் - Radio Channel Setup
- அலையெண் துள்ளல் - Frequency Hopping
- கைமாற்றங்கள் - Handovers
- நகர் நிலைமாற்றகம் - Mobile Switching Center - MSC
- பிணையத் துணையமைப்பு - Network Subsystem
- பொது தொலைபேசி பிணையம் - Public Switched Telephone Network - PSTN
- ஒருங்கிணைநத இலக்கச் சேவைப் பிணையம் - Integrated Services Digital Network - ISDN
- பதிவுசெய்தல் - Registration
- உறுதிபடுத்துதல் - Authentication
- இருப்பிடம் புதுப்பித்தல் - Location Update
- அலையும் சந்தாதாரரிற்கு அழைப்பு திவைவு - Roaming Subscriber Call Routing
- குறிகைமுறை - Signalling
- இல் இருப்பிடம் பதிவகம் - Home Location Register - HLR
- விஜய(வருகையாளர்) இருப்பிடம் பதிவகம் - Visitor Location Registor - VLR
- நகர்நிலைய அலையல் எண் - Mobile Station Raoming Number - MSRN
- பரவல் தரவுத்தளம் - Distributed Database
- பயனில்லா காலகட்டங்கள் - Idle Time Slots
- நகர்கருவி ஒலிபரப்பு கட்டுப்பாடுத் தடம் - Broadcast Control Channel
- தாற்காலிக நகர்சந்தாதாரர் அடையாளம் - Temporary Mobile Subscriber Identity - TMSI
- கம்பியில்லா அணுகு நெறிமுறை - Wireless Access Protocol
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக