சனி, 1 அக்டோபர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 79

இலக்கியம் - திணை இலக்கியம்

26.      சங்க இலக்கியங்கள் பாடப்பட்டுள்ள பாவகைகள் யாவை?
ஆசிரியப்பா, கலிப்பா, பரிபா.

27.       எட்டுத்தொகையில் பாவால் பெயர் பெற்ற நூல்கள் யாவை?
கலித்தொகை (கலிப்பா), பரிபாடல் (பரிபா).

28.       எட்டுத்தொகை நூல்களைப் பொருள் அடிப்படையில் பகுக்க?
அகப்பொருள் நூல்கள் ஐந்து (நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை). புறப்பொருள் நூல்கள் இரண்டு (புறநானூறு, பதிற்றுப்பத்து). அகமும் புறமும் கலந்த நூல் ஒன்று (பரிபாடல்).

29.      சேரநாட்டில் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை நூல்கள் யாவை?
ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியன.

30.      சேரநாட்டுத் தொகைநூல்களின் அமைப்பு ஒருமை என்ன?
ஒருபொருள் பற்றிய பத்துப் பாடல்கள்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...