புதன், 5 அக்டோபர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 87

இலக்கியம் - திணை இலக்கியம்


66. இரவு நேரத்தில் மழை முகிலின் இயக்கத்தைக் காண மின்மினியை விளக்காகப் பயன்படுத்தியதைப் பாடிய நற்றிணைப் புலவன் யார்?
பெருங்கௌசிகனார் (நற்.44).

67.  பரதவர் மகளுக்கும் (மீனவர் மகளுக்கும்) மன்னன் மகனுக்கும் இடையிலான காதலைப் பாடிய சங்க நூல் எது?
நற்றிணை (45).

68.    அறிவையும் உள்ளத்தையும் பகுத்துப் பாடிய நற்றிணைப் புலவர் யார்?
உலோச்சனார் (நற்.64).

69.   முருகன், வள்ளி புணர்ச்சியைப் பாடிய நற்றிணைப் புலவர் யார்?
அம்மல்லனார் (நற். 82).

70.  மாலைப்பொழுதை பகல்மடிபொழுது எனப் புனைந்த சங்க நூல் எது?
நற்றிணை (109).

கருத்துரையிடுக