சனி, 1 அக்டோபர், 2011

கலைச்சொற்கள்


தேவநேயப் பாவாணர் எழுதி 1967இல் நேசமணி பதிப்பகம் மூலமாக  வெளியிட்ட தமிழ் வரலாறு என்ற நூலில் அவர் தந்துள்ள சொல்லாக்கங்கள் இவண் தரப்படுகின்றன. ஆங்கிலச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல், பிறமொழிச் சொற்களுக்குரிய தமிழ்ச்சொற்கள், தமிழ்ச்சொல்லுக்குரிய பொருள் என்ற நிலைகளில் இவை தரப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்துவது காலத்தின் தேவையாகும்.

ஆங்கிலச்சொல்     -    தமிழ்ச்சொல்
Literary dialect             -              இலக்கிய நடைமொழி
Voiceless                     -     பொலிவிலா
Pro nouns                     -     பகரப் பெயர்கள்
Sister dialect                -           உடன்பிறப்புமொழி
Pre dravidians              -     திரவிட முன்னையர்
proto dravidians           -           மூலத் திரவிடர்
Natural language          -     இயற்கை மொழி
Inarticulate speech       -     முழைத்தல் மொழி
Emotional sounds        -     உணர்ச்சியொலிகள்
Vocative sounds          -     விளியொலிகள்
Imitative sounds          -    ஒப்பொலிகள்
Symbolic sounds         -     குறிப்பொலிகள்
Nursery sounds          -     குழவி வளர்ப்பொலிகள்
Deictic sounds             -     சுட்டொலிகள்
Articulate speech         -           இழைத்தல் மொழி
Unit of speech             -     மொழியலகு
Homonymy                 -     பல்சொல்லொரு வடிவு
Polysemy                     -     பல்பொருளொரு சொல்
Meta thesis                   -           இலக்கணப்போலி
Analogy                       -     ஒப்புமையமைப்பு
Semantic changes        -     பொருட்டிரிவு முறைகள்
Euphemism                  -           இடக்கரடக்கல்
Pro boscis                    -     முன்தூம்பு
Specialization              -     சிறப்பிக்கை
Generalization             -     பொதுப்பிக்கை
Phonemics                   -    எழுத்தொலியம்
Diphthongs                  -     புணரொலியன்கள்
Voiced sounds             -     பொலிவொலிகள்
Allophones                  -     மறுவொலியன்கள்
Phonetics                     -     பலுக்கொலியம்
Accent                         -     விழுத்தம்
Transliteration              -     வரிபெயர்ப்பு
Violet                           -     கத்தரி (வண்ணம்)
Orange                         -     பழுக்காவி (வண்ணம்)

வடசொல்           தமிழ்ச்சொல்
வசதி           -    ஏந்து
உச்சரிப்பு        -    எழுத்துப் பலுக்கம்
சம்பந்தி         -    உறவாடி

தமிழ்               தமிழ்
குருவி          -    சிறுபறவை
கொண்மூ       -    கடல்நீரைக் கொள்ளும் முகில்
தொடரியம்      -    முற்றுச் சொற்றொடர்
அணங்குதல்     -    ஒலித்தல்
கதுவாலி        -    குறுகிய வாலையுடைய பறவையினம்
முனிதல்        -    வெறுத்தல்
ஆய்தம்         -    நுண்ணிய ககரம்
படைவீடு       -    படை மறவர் நிலையாக வதியும் இடம்
தாவளம்        -    அயலூரில் தங்கியிருக்குமிடம் ( Lodging)
நத்தம்          -    போரினாற் பாழானவூர்

கருத்துரையிடுக