இலக்கியம் - திணை இலக்கியம்
61. பண்டைத்தமிழரின் பொறியியல் நுட்பத்தினைக் காட்டும் கொல்லிப்பாவைப் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ள நற்றிணைப் பாடல்கள் எவை?
நற். 185,192,201 ஆகிய மூன்று பாடல்கள்.
62. நற்றிணைப் பாடல்களுள் புனையப்பட்டுள்ள பெரும்பொழுதுகள் எத்தனை?
ஆறு.
63. தலைவியின் நோய் அறியாது வெறியாடு களத்திற்கு வந்த முருகக் கடவுளை அறியாமை உடையவன் என இகழ்ந்துரைத்த நற்றிணைப் பாடலைப் பாடிய புலவர் யார்?
பிரம்மசாரி (நற்.34)
64. பெயரன் (பேரன்) பற்றிய குறிப்பினைக் கூறும் நற்றிணைப் பாடல் எது?
நற். 40.
65. வெயிலின் மிகுதித் தோற்றத்திற்கு வெண்ணிறஆடை விரிப்பை உவமை சொல்லிய நற்றிணைப் புலவர் யார்?
எயினந்தையார் (நற். 43).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக