செவ்வாய், 4 அக்டோபர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 85

இலக்கியம் - திணை இலக்கியம்


56.      மோசை என மோதிரத்தைக் கூறும் நூல் எது?
நற்றிணை (188).

57.  நற்றிணையில் இடம்பெற்றுள்ள ஒரு முலையறுத்த திருமா உண்ணி பற்றிய பாடற்பகுதி யாருடைய வரலாறாகக் கருதப்படுகிறது?
சிலப்பதிக்காரக் கண்ணகியின் வரலாறாகக் கருதப்படுகின்றது.

58. தன்னைச் சார்ந்தோர் துன்பத்தை நீக்குவதைச் செல்வமாகக் கருதிய நூல் எது?
நற்றிணை (210).

59. கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததைப் பாடிய பழந்தமிழ் நூல் எது?
நற்றிணை (9).

60.  கற்புடைய இளம்பெண் ஒருத்தி தன் குழந்தையைப் பேய்க்குப் பழிகொடுக்க எண்ணியதைப் பாடியநூல் எது?
நற்றிணை (15). பாடிய புலவர் அறிவுடைநம்பி.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...