திங்கள், 3 அக்டோபர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 84

இலக்கியம் - திணை இலக்கியம்

51.       நற்றிணையை தொகுப்பித்தவர் பெயர் என்ன?
பாண்டியன் பன்னாடு தந்தான்.

52.       பாடல் தொடரால் பெயர்பெற்ற நற்றிணைப் புலவர்களின் எண்ணிக்கை?
எழுவர்.

53.       இளவேனிலை முதிராவேனில் என்றழைத்த நற்றிணைப் புலவர் யார்?
பாலை பாடிய பெருங்கடுங்கோ (நற். 337).

54.      நற்றிணையில் எத்தனை மரங்கள் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது.?
47 மரங்கள்.

55.       முப்பத்தாறு வகைச் செடி,கொடிகளைப் பாடும் நூல் எது?
நற்றிணை.

கருத்துரையிடுக