இலக்கியம் - திணை இலக்கியம்
31. ஐந்து புலவர்களால் பாடப்பட்டுத் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை நூல்கள் யாவை?
ஐங்குறுநூறு. கலித்தொகை.
32. திணை என்ற சொல்லை பெயரில் கொண்ட எட்டுத்தொகை நூல் எது?
நற்றிணை.
33. பாடல் எண்ணிக்கையை பெயரில் கொண்ட தொகை நூல்கள் யாவை?
ஐங்குறுநூறு, அகநானூறு. புறநானூறு. பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு.
34. பத்துப்பாட்டு நூல்களின் பொருள் பகுப்பைக் கூறுக?
அகப்பொருள் நூல்கள் நான்கு (குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை). புறப்பொருள் நூல்கள் ஆறு. (திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம்).
35. நற்றிணை பாடிய புலவர்களின் தொகை என்ன?
192.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக