வியாழன், 13 மார்ச், 2014

மயிலாடுதுறை அ.வ.அ. கல்லூரிப் பயிலரங்கு (01.02.2014)

  மயிலாடுதுறை, அன்பநாதபுரம் வகையறா அறத்துறைக் கல்லூரியும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்துச் சங்க இலக்கியங்கள் கற்றல், கற்பித்தலில் பல்துறையறிவின் பங்கு என்னும் பொருண்மையில் பத்து நாள் பயிலரங்கு (29.01.2014 - 07.02.2014) ஒன்றினை நடத்தின. சங்க இலக்கியக் கற்றலுக்குப் பல்துறை அறிவின் தேவையையும் இன்றியமையாமையையும் இக்காலத்தில் பலரும் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. இந்நிலையில் காலத்திற்கும் பயனுடைய இப்பொருண்மையில் பயிலரங்கு நிகழ்த்தி மாணவர் உள்ளத்தில் அக்கருத்தினைப் பதியமிட்டமைக்காகப் பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் மதிப்பிற்குரிய பேராசிரியர் முனைவர் சு. தமிழ்வேலு அவர்களுக்கு   நாம் நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். அவருக்கு நன்றி. 
     அறிவுசார் நிலையில் நிகழ்த்தப்பட்ட அப்பயிலரங்கில் முனைவர் ஆ. மணி அவர்கள் உரையாசிரியர்களும் அகப்பொருளும் என்னும் தலைப்பில் கடந்த 01.02.14 சனிக்கிழமை உரையாற்றினார். தமிழ் அகப்பொருளைப் புரிந்துகொள்ளுதலில் உரையாசிரியர்களின் துணை; துணையின்மை ஆகியவற்றை மையமிட்டு அவ்வுரை அமைந்தது. உரையாளர் அறிமுகவுரையை முனைவர் சு. தமிழ்வேலு அவர்கள் ஆற்றினார். அ.வ.அ. கல்லூரியின் புலமுதன்மையர் முனைவர் வரதராசன் அவர்கள் கருத்துரையாற்றியதோடு, மணி அவர்களுக்குப் பரிசு வழங்கிப் பாரட்டினார். விலங்கியல் பேராசிரியராகிய முனைவர் வரதராசன் அவர்களின் தமிழிலக்கியப் புலமையும் தமிழன்பும் ஒவ்வொரு தமிழரும் பின்பற்ற வேண்டியன. அவர்தம் அன்பினைப் பெறும் வாய்ப்பு முனைவர் தமிழ்வேலு அவர்களின் அழைப்பாலும், பேராசிரியர் மோ. கீதா அவர்களின் அன்பான அறிமுகத்தாலும் வாய்த்தது. அதற்காக முனைவர் தமிழ்வேலு அவர்களுக்கும் பேரா. கீதா அவர்களுக்கும் நன்றி மலர்கள். பேராசிரியர் சாந்தகுமாரி அவர்கள் தொகுப்புரையும் நன்றியுரையும் ஆற்றினார். மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்ற அப்பயிலரங்கு மிகச்சிறப்பாக நடைபெற்றது. பயிலரங்கக் காட்சிகள் இவை:   

 பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு. தமிழ்வேலு அவர்களின் தொடக்கவுரை.
 கல்லூரியின் புலத்துறை முதன்மையரும் தேர்வாணையருமாகிய பேராசிரியர் முனைவர் வரதராசன் அவர்கள், முனைவர் ஆ. மணி அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கல்.
 கல்லூரியின் புலத்துறை முதன்மையரும் தேர்வாணையருமாகிய பேராசிரியர் முனைவர் வரதராசன் அவர்களின் கருத்துரை.
 முனைவர் ஆ. மணி அவர்களின் உரை : உரையாசிரியர்களும் அகப்பொருளும்.

தமிழ்த்துறைப் பேராசிரியர் சாந்தாகுமாரி அவர்களின் மதிப்பீட்டுரையும் நன்றியுரையும்.

அழைப்பிதழ்

அழைப்பிதழ்

அழைப்பிதழ்

அழைப்பிதழ்

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

siRappu. vazhthukal.

பெயரில்லா சொன்னது…

மணி சாருக்கு வாழ்த்துக்கள். உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம். பணி சிறக்க வாழ்த்துக்கள். இப்படிக்கு அன்புச்செல்வன் & இளங்கோ

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...