ஞாயிறு, 26 டிசம்பர், 2010

ஐங்குறுநூறு - பொ.வே.சோ. உரைப்பதிப்பு 1961

         ஐங்குறுநூற்றுக்குப் பழைய உரை ஒன்றுண்டு. அவ்வுரை உ.வே.சாமிநாதையர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. ஔவை துரைசாமிப் பிள்ளை புத்துரை ஒன்று எழுதியுள்ளார். கழகம் பொ.வே.சோமசுந்தரனார் அவர்களைக் கொண்டு உரை ஒன்றை எழுதுவித்து வெளியிட்டுள்ளது. அதன் முதற்பதிப்பு 1961 அக்டோபரில் வெளிவந்தது. ஐங்குறுநூற்றுப் பதிப்போடு பதினெண்மேல்கணக்கு, கீழ்க்கணக்கு நூல்கள் உரையோடு வெளிவந்து நிறைவுறுகின்றன என்பது அந்நூலின் பதிப்புரை தரும் செய்தியாகும்.

          1.தலைப்பு, 2. தலைப்பு விளக்கம், 3. பாடல், 4. கூற்று, 5. கூற்று விளக்கம் ( துறை விளக்கம் என்பார் பொ.வே.சோ.), 6.பழைய உரை, 7.பதவுரை ( சொற்பொருள் என்பார் பொ.வே.சோ.), 8. விளக்கம், 9. பாடவேறுபாடு (பாடபேதம் என்பார் பொ.வே.சோ.) ஆகிய உரைக்கூறுகளைக் கொண்டது  பொ.வே.சோ.வின் உரைப்பதிப்பு. 1961 ஆம் ஆண்டுப் பதிப்பின் தலைப்புப் பக்கம் இது.


1 கருத்து:

சென்னை பித்தன் சொன்னது…

நற்றிணை நல்ல குறுந்தொகை
ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப் பத்து ஓங்கு
பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்
புறமென்னும்
இத்திறத்த எட்டுத்தொகை--- என்று எட்டுத்தொகை நூல்கள் பற்றிப் படித்த நினைவு வருகிறது!