இணையத்தில் பயிலும் நண்பர்களுக்குத் தமிழ் இலக்கிய, இலக்கண வரலாற்றை அறிமுகம் செய்யும்நோக்கில் இப்பகுதி தரப்படுகின்றது. பான்மையும் வினா-விடையாக இப்பகுதி அமைக்கப்படுள்ளது.
இலக்கணங்கள்
தொல்காப்பியம்
1. தமிழில் கிடைக்கும் நூல்களுள் மிகப்பழமையான நூல்?
தொல்காப்பியம்
2. தொல்காப்பியம் தமிழ்மொழி, இலக்கியத்தின் ஊற்றுக்கண் எனப் போற்றியவர்?
தமிழண்ணல்
3. தொல்காப்பிய நினைவும் கருத்தறிவும் பெறுதல் தமிழனின் பிறப்புக் கடமை என முழங்கியவர்?
வ.சுப. மாணிக்கம்.
4. மொழியில் ஒலியின் வருகையை ஆராய்ந்து உரைத்தவர்களில் முதன்மையானவர்?
தொல்காப்பியர்.
5. தமிழக எல்லையாக வடவேங்கடம் தென்குமரியைக் கூறும் பாடற்பகுதி இடம்பெற்ற நூல்?
தொல்காப்பியப் புறத்துறுப்பாக்கிய தொல்காப்பியப்பாயிரம்
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக