புதன், 17 ஆகஸ்ட், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 6

இலக்கணம் -  தொல்காப்பியம்


26.      தொல்காப்பியர் கூறும் எண்வகை வனப்புக்கள் யாவை?   
அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு.

27.       தொல்காப்பியர் கூறிய ஆறுவகை உயிர்ப்பாகுபாடு?   
ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நான்கறிவுயிர், ஐந்தறிவுயிர், ஆறறிவுயிர்.

28.       அறுவகை உயிர் பாகுபாட்டிற்குத் தொல்காப்பியர் காட்டிய சான்றுகள் யாவை?
ஓரறிவுயிர் - புல், மரம்
ஈரறிவுயிர் - நந்து, முரள்.
முவறிவுயிர் - சிதல், எறும்பு
நான்கறிவுயிர் - நண்டு, தும்பி
ஐந்தறிவுயிர் - மா (விலங்கு) புள் (பறவை)
ஆறறிவு உயிர்  - மக்கள்

29.      தொல்காப்பியர் கூறிய தெய்வங்கள்?   
சேயோன் (முருகன்) மாயோன் (திருமால்) வேந்தன், வருணன், கொற்றவை, பால்வரைத் தெய்வம்.

30.      தொல்காப்பியம் முதன்முதலில் அச்சாகிய ஆண்டு?   
1849. பதிப்பித்தவர் - மழவை மகாலிங்கையர். பதிப்பிக்கப்பட்ட பகுதி - தொல்காப்பிய எழுத்ததிகார நச்சினார்க்கினியர் உரை.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...