இலக்கணம் - தொல்காப்பியம்
56. இயைபு என்ற தொல்காப்பிய வனப்புக்குச் சான்று தருக?
மணிமேகலை.
57. கட்டளையடி விளக்கம் தருக?
தொல்காப்பியர் குறளடி, சிந்தடி போன்றவற்றை எழுத்தளவையால் எண்ணி உரைப்பர். இவ்வடிவகை கட்டளையடி எனப்படும்.
58. சங்கப்பாடல்கள் எவ்வகை அடியமைதியைக் கொண்டவை?
சீர்வகையடியைக் கொண்டவை.
59. தொல்காப்பியர் கூறிச் சங்கப் பாடல்களில் இடம்பெறாத அசைகள்?
நேர்பசை, நிரைபசை.
60. தொல்காப்பிய அடிகள் எத்தனை?
3999 அடிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக