வியாழன், 11 ஆகஸ்ட், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 3


இலக்கணங்கள் - தொல்காப்பியம்

1.       தொல்காப்பியர் வகுத்த ஆணைப்படியே பிற்கால இலக்கண நூலார் நூல் இயற்றியதாகக் கூறியவர்?
பல்காப்பியனார்.  
 
2.       வடுவில் காப்பியம் எனத் தொல்காப்பியத்தைப் போற்றியவர்?
ஒட்டக்கூத்தார் (குலோத்துங்கச் சோழன் பிள்ளைத்தமிழில்)

3.       தொல்காப்பியப் பொருளதிகாரம் சிலகாலம் மறைக்கப்பட்டிருந்த செய்தியை உரைத்தோர்?    
இறையனார் களவியல் உரைகாரர், ஒட்டக் கூத்தர்.

4.       தொல்காப்பியத்திற்கு முதல் உரை கண்டவர்?   
இளம்பூரணர் (இவர் உரைக்கு முன்னரும் வேறு உரை இருந்த செய்தி அவருரையில் அறிப்படும் செய்தி).
5.       தொல்காப்பியத்திற்கு உரைகண்ட பழந்தமிழ்ப் பெருமக்கள் ?
பேராசிரியர் (தொல்காப்பியத்தின் கடைசி ஐந்து இயல் மட்டும்)
சேனாவரையர் (சொல்லதிகாரம் மட்டும்)
கல்லாடர் (சொல்லதிகாரம் மட்டும்)
நச்சினார்க்கினியர் (பொருளதிகாரச் சில இயல்கள் நீங்கலான அனைத்திற்கும்)
தெய்வச்சிலையார் (சொல்லதிகாரம் மட்டும்)
(தொடரும்)
கருத்துரையிடுக