புதன், 17 ஆகஸ்ட், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 7

இலக்கணம் - தொல்காப்பியம்


31.       தொல்காப்பிய முழுமைப் பதிப்பு முதன்முதலில் வெளியான ஆண்டு?
1858.  பதிப்பித்தவர் - சாமுவேல் பிள்ளை.

32.       தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள்?
கைக்கிளை, முல்லை, குறிஞ்சி. பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை.

33.       தொல்காப்பியர் கூறும் புறத்திணைகள்?
வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்.

34.      தொல்காப்பியர் கூறும் அகத்திணை புறத்திணை இயைபு?
வெட்சி - குறிஞ்சிக்குப் புறன்
வஞ்சி - முல்லைக்குப் புறன்
உழிஞை - மருதப் புறன்
தும்பை - நெய்தல் புறன்
வாகை - பாலைப் புறன்
காஞ்சி - பெருந்திணைப் புறன்
பாடாண் - கைக்கிளைப் புறன்.

35.       தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுகள்?    
நகை, அழுகை, இளிவரல் (தன் நிலையில் தாழ்தல்), மருட்கை (வியப்பு), அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...