வியாழன், 18 ஆகஸ்ட், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 8

இலக்கணம் - தொல்காப்பியம்

36       தொல்காப்பியர் கூறியுள்ள உவமை வகைகள்?   
வினைஉவமம், பயன்உவமம், மெய் உருவமம், உரு உவமம் என்ற நான்கு.

37.       தொல்காப்பியர் கூறும் உவம உருபுகளின் எண்ணிக்கை?   
36.

38.       செய்யுள் உறுப்புகள் 34 எனச் சொல்லியவர்?  
தொல்காப்பியர்.

39.      யாப்பு அடிப்படை இலக்கிய பகுப்புகளாகத் தொல்காப்பியர் கூறுவன?
 பாட்டு, உரை, நூல், வாய்மொழி (மந்திரம்), பிசி (விடுகதை), அங்கதம், முது சொல் (பழமொழி) ஆகிய ஏழும் யாப்பு அடிப்படை இலக்கியப் பகுப்புக்களாகும்.

40.      அடிவரையறை இல்லாத இலக்கிய வகைகளாகத் தொல்காப்பியர் கூறுவன?
உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல்.

கருத்துரையிடுக