திங்கள், 29 ஆகஸ்ட், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 20

இலக்கணம் - எழுத்து, சொல் இலக்கண நூல்கள்

நன்னூல் (13 நூற்.)

1.         தன்மையால் பெயர் பெற்ற நூல்களுள் ஒன்றாக உரைகாரர் கூறும் நூல்?
நன்னூல் (மற்றொன்று சீவக சிந்தாமணி).

2.         நன்னூற் பகுப்பு?
எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என இரு அதிகாரங்களும், ஒவ்வொரு அதிகாரமும் 5 இயல்ககளும் (மொத்தம் 10 இயல்கள்), பாயிரம் முதலாக 462 நூற்பாக்களும் கொண்டது.

3.         நன்னூல் ஆசிரியர்?
பவணந்தி முனிவர் (சமண சமயத்தினர்).

4.         நன்னூலின் வேறு பெயர்கள்?
சிற்றதிகாரம் (இரு அதிகாரங்களுடைமையால்). பின்னூல் (தொல்காப்பியம் தொன்னூலாதலின், இது பின்னூல்).

5.         நன்னூல் தோன்றக் காரணமாக அமைந்தவன்?
அமராபரணன் என்ற சிறப்புப்பெயர் பெற்ற கங்க வம்சத்து அரசன் சீயகங்கன்.

1 கருத்து:

தமிழார்வன் சொன்னது…

ஐயா,
அவர்களுக்கு வணக்கம். தங்களது நன்னூல் பற்றிய சிறப்பு தகவல்கள் பயனுள்ளதாக இருக்கின்றன. இணையத் தமிழுக்கான உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.


தமிழார்வன்.

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...