இலக்கணம் - ஐந்திலக்கணம்
சுவாமி நாதம் (19 நூற்.)
1. ஐந்திலக்கணம் கூறும் சுவாமிநாதத்தின் ஆசிரியர்?
சுவாமி கவிராயர்.
2. சுவாமிநாதப் பகுப்பு?
எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், யாப்பதிகாரம், அணியதிகாரம் என ஐந்து அதிகாரமும், மரபு என்னும் பெயரிய உட்பகுப்பும் கொண்டது. பாயிரம் உட்பட 201 எண்சீர் விருத்தங்களும் உடையது.
3. ஒரே ஒரு நூற்பாவுடைய சுவாதிநாத உட்பகுப்பு?
அமைதிமரபு.
4. சுவாமிநாதப் பழைய உரை பற்றிக் கூறுக?
நூலின் முதல் 14 நூற்பாக்களுக்குரிய விரிவுரை ஒன்று கிடைத்துள்ளது. இதனை எழுதியவர் யாரெனத் தெரிந்திலது.
5. சுவாமிநாத மூலம், சுவாமிநாத மூலமும் விருத்தியுரையும் ஆகியவற்றை வெளியிட்டவர்?
செ.வை. சண்முகம் (சுவாமிநாத மூலம் தனிநூலாக 1975 இலும், சுவாமிநாத மூலமும் விருத்தியுரையும் தனிநூலாக 1976 இலும் வெளிவந்துள்ளன. விருத்தியுரை எழுதியவர் செ.வை. சண்முகம்).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக