இலக்கணம் - தொல்காப்பியம்
41. தொல்காப்பியர் கூறும் நூல் வகைகள்?
முதல்நூல், வழிநூல்.
42. வழிநூல் வகைகளாகத் தொல்காப்பியர் கூறுவன?
தொகைநூல், விரிநூல், தொகைவிரிநூல், மொழியாக்கநூல்.
43. நூல் உத்திகள் எத்தனை?
32.
44. நூற் குற்றங்களாகத் தொல்காப்பியர் கூறுவன?
கூறியது கூறல், மாறுபடக்கூறல், குன்றக்கூறல், மிகைபடக் கூறல், பொருள்இல மொழிதல், மயங்கக் கூறல், இன்னா யாப்புடைத்தாதல், இழிவுபடக்கூறல், பொருள் விளங்காதவாறு உரைத்தல், எந்தவகையிலும் பிறருக்கு விளங்கும்படிக் கூறாமை.
45. தொல்காப்பியர் கூறிய இளமைப் பெயர்களைக் கூறுக?
பார்ப்பு, பறழ், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி, போத்து ஆகியன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக