இலக்கணம் - ஐந்திலக்கண நூல்கள்
வீரசோழீயம் (11 ஆம் நூற்.)
1. ஐந்திலக்கணம் கூறும் வீரசோழீயத்தை இயற்றியவர்?
பொன்பற்றி ஊரினராகிய புத்தமித்திரர்.
2. முதலாம் இராசேந்திரன் மகன் வீரராசேந்திரன் பெயரில் அமைந்த நூல்?
வீரசோழீயம்.
3. கந்தபுராணத்தின் திகடச் சக்கரம் என்ற தொடருக்கு இலக்கணமாகிய நூல்?
வீரசோழீயம்.
4. பௌத்தராகிய புத்தமித்திரரின் இலக்கண நூலுக்கு உரை செய்தவர்?
புத்தமித்திரரின் மாணவர் பெருந்தேவனார்.
5. தமிழை அவலோகீஸ்வரர் உண்டாக்கியதாகவும் அவரிடம் தமிழ் கற்றவர் அகத்தியர் என்றும் கூறும் நூல்?
வீரசோழீயம்.
6. வீரசோழீய நூற்பா யாப்பு?
கட்டளைக் கலித்துறை யாப்பு (இதனால் இந்நூல் வீரசோழீயக் காரிகை என்றும் வழங்கப்பட்டது).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக