இலக்கணம் - எழுத்து, சொல் இலக்கணம்
நன்னூல்
6. நன்னூலுக்கு முதல் உரை செய்தவர்?
மயிலைநாதர் என்ற சமணர்.
7. நன்னூலுக்கு உரை கண்ட பழந்தமிழ்ப் பெருமக்கள்?
சங்கர நமச்சிவாயர் (17 ஆம் நூற்றாண்டு), ஊற்றங்கால் ஆண்டிப்புலவர் (17 ஆம் நூற்.), சிஞானமுனிவர் (சங்கரநமச்சிவாயர் உரையைத் திருத்திப் புத்துரை செய்தவர்), கூழங்கைத் தம்பிரான் (18 ஆம் நூற்.), இராமாநுசக் கவிராயர் (19 ஆம் நூற்.).
8. நன்னூல் மயிலைநாதர் உரையை முதலில் வெளியிட்டவர்?
உ.வே. சாமிநாதையர் (1918 இல்).
9. மயிலைநாதர் உரைப்படி நன்னூற் பாவகை?
அகவற்பா 458. வெண்பா 3 ஆக 461 நுற்பாக்கள்.
10. பழமொழி நானூற்றின் முதற்பாடல் இதுவென அடையாளங் காட்டிய உரை?
நன்னூல் மயிலைநாதர் உரை (நன்னூல் 418 ஆம் பாடலுரை).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக