வியாழன், 1 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 22

இலக்கணம் - எழுத்து, சொல் இலக்கண நூல்கள்


நேமிநாதம் (13 நூற்.)

1.         நேமிநாத ஆசிரியர்?
குணவீரபண்டிதர்.

2.         நேமிநாதம் யார் பெயரால் அமைந்த நூல்?
சமண சமயத் தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் 22 ஆம் தீர்த்தங்கரர் நேமிநாதர் பெயரால் அமைந்தது.

3.         நேமிநாதத்தின் வேறு பெயர்?
சின்னூல் (அளவையால் பெற்ற பெயர். சின்னூல் உரைத்த குணவீர பண்டிதன்  என்பது தொண்டை மண்டல சதகம்).

4.         நேமிநாதப் பகுப்பு?
எழுத்ததிகாரம் (ஓரியல்), சொல்லதிகாரம் (9 இயல்கள் - மரபு என்னும் பெயரின)என இரண்டதிகாரமும், தற்சிறப்புப் பாயிரப் பாடல்கள் உட்பட 99 வெண்பாக்களும் கொண்ட நூல் நேமிநாதம்.

5.         நேமிநாத உரைகாரர்?
உரையாசிரியர் யாரெனத் தெரியவில்லை. பொழிப்புரை, விளக்கவுரை, காட்டு ஆகிய முன்றும் கொண்ட உரை இது. 14 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் என்பர்.

6.         சார்பெழுத்து 216 என முதன்முதலாகக் கணக்கிட்டுரைத்தவர்?
குணவீர பண்டிதர் (அவிநயனாரும் கூறியுள்ளார். எனினும் கணக்கு சற்று வேறுபாடுடையது என்பர். அவிநயனார் 228 எழுத்துகள் என்பர்).

கருத்துரையிடுக