புதன், 7 அக்டோபர், 2015

தமிழ் ஊடக வினாடி வினா -2015.

தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறையில் பல்கலைக் கழக நிதிநல்கைக் குழுவின் உதவியோடு இயங்கிவரும் இதழியல், மக்கள் தகவலியல் சான்றிதழ்ப் பாடப்பிரிவும், புதுவை, ரைட் சேனலும் இணைந்து புதுவை, தமிழகம் அளவில் அனைத்துக் கல்லூரிகளுக்கிடையிலான தமிழ் ஊடக வினாடி வினா – 2015 போட்டியை இன்று (வியாழன்) நடத்தின.

     முதலில் நடைபெற்ற தகுதிச்சுற்றில் மூடி முத்திரையிடப்பட்டிருந்த வினாத்தாள்கள் மாணவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டன. அத்தேர்வில் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரி, கடலூர் இமாகுலேட் மகளிர் கல்லூரி, இந்திராகாந்தி கலை, அறிவியல் கல்லூரி, பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி, இதயா மகளிர் கலை, அறிவியல் கல்லூரி, காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம், தாகூர் கலைக்கல்லூரி, புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், கஸ்தூரிபாய் மகளிர் கல்லூரி ஆகிய ஒன்பது கல்லூரிகள் கலந்து கொண்டன. அவற்றுள், காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரி, கஸ்தூரிபாய் மகளிர் கல்லூரி, இந்திராகாந்தி கலை, அறிவியல் கல்லூரி, காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம், தாகூர் கலைக்கல்லூரி, புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய ஆறு கல்லூரிகள் வெற்றி பெற்று இறுதிச் சுற்றில் நுழைந்தன. இறுதிச்சுற்றுக்கு முன்னர் அணிகள் அமரும் இடங்கள் குலுக்கல்முறையில் தேர்வு செய்யப்பட்டன. எந்த அணிக்கு என்ன வினா வரும் என்பதை யாரும் அறியாமல் இருக்க இம்முறை கடைபிடிக்கப்பட்டது. இதன்மூலம் வெற்றி பெறும் அணியினர் தங்கள் திறமை கொண்டே வெற்றி பெற வேண்டும் என்ற நிலை உறுதிப்படுத்தப்பட்டது.

     11.00 மணிக்கு இறுதிச்சுற்று தொடங்கியது. சான்றிதழ்ப் பாட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆ. மணி அவர்கள் இயக்குநராக இருந்துப் போட்டியை நடத்தினார். ஐந்து சுற்றுக்களாக நடைபெற்ற அப்போட்டியின் வினாக்கள் முதல் சுற்றில் கடிகாரச் சுழற்சி முறையிலும், அடுத்த சுற்றில் கடிகார எதிர்முறைச் சுழற்சியிலும் நடத்தப்பட்டன. இம்முறைகளின் மூலம் எந்த ஒரு அணிக்கும் எந்த ஒரு சிறப்புக் கவனமும் தரப்படவில்லை என்ற நிலை வலியுறுத்தப்பட்டது. ஒரு அணிக்கு மட்டும் எளிய வினாக்களும், ஒரு அணிக்கு கடினமான வினாக்களும் வரும் நிலை இதன்மூலம் தவிர்க்கப்பட்டது.

பல்வேறு வகைகளிலும் திறமையுடையோரே வெற்றி பெற வேண்டும் என்ற நன்னோக்கத்தில் நடத்தப்பட்ட அப்போட்டியில் தாகூர் கலைக்கல்லூரி மாணவர்கள் திரு. லிங்கேஸ்வரன், திரு. கண்ணதாசன் ஆகியோர் முதலிடம் பெற்று வெற்றி பெற்றனர். புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன மாணவியர் இரண்டாம் இடம் பெற்றனர். போட்டியின் நிறைவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் ஆ. விஜயராணி வரவேற்புரையாற்றினார்.  

     நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய கல்லூரி முதல்வர் முனைவர் வ. இராமசாமி அவர்கள் ”தமிழ்த்துறையினர் இத்தகைய புதுமையான நிகழ்ச்சிகளை நடத்தி வருவது பாராட்டுக்குரியது. கல்வியின் மாற்று வடிவமாக இந்நிகழ்ச்சியைக் கருதலாம். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஆதரவளித்து வருகின்ற கல்லூரிக் கல்வித்துறை இயக்குநர் திரு. த. கரிகாலன் அவர்களுக்கும், ரைட் சேனல் நிறுவனர் அ.மு. சலீம் அவர்களுக்கும், ரைட் சேனல் இயக்குநர் திரு. யாசர் அராபத் அவர்களுக்கும் நன்றி. புதுவையின் முதல் கல்லூரியான தாகூர் கலைக்கல்லூரி முதன்மையான கல்லூரியாகப் பல புதிய வரலாற்று முயற்சிகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது” என்றார்.

     வெற்றி பெற்ற மாணவர்களுக்குக் கேடயமும் நூல்களும் சான்றிதழும் வழங்கிச் சிறப்புரை ஆற்றிய உயர்கல்வித்துறை இயக்குநர் திரு. த. கரிகாலன் அவர்கள் ”கல்விமுறையில் முன்னோடியான முயற்சிகளை மேற்கொள்ளும் தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைக்கும், முதல்வர் முனைவர் வ. இராமசாமி அவர்களுக்கும் பாரட்டுக்கள்” என்று கூறினார்.
  
     தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தி. செல்வம் அவர்களும், ரைட் சேனல் இயக்குநர் திரு. யாசர் அராபத் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.

வாழ்த்துரை வழங்கிய ரைட் சேனல் நிறுவனர் திரு. அ. மு. சலீம் அவர்கள் ”தாகூர் கலைக்கல்லூரியின் இத்தகைய கல்வி முயற்சிகளுக்கு ரைட் சேனல் துணைநிற்கும்” என்றார்.  

தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் க. கண்ணன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். சான்றிதழ்ப் பாட ஒருங்கிணைப்பாளரும், வினாடி வினா இயக்குநருமான முனைவர் ஆ.மணி நன்றி கூறினார். மாணவர்ப் பெயர்ப்பதிவு, சான்றிதழ் தயாரித்தல் ஆகிய பணிகளை முனைவர் தி. தாமரைச்செல்வி, முனைவர் இரா. அகிலா ஆகியோர் செய்தளித்தனர். வினாடி வினாவுக்குரிய தகுதித் தேர்வினை முனைவர் ஆ. விஜயராணி, பேரா. மு. பழனியம்மாள் ஆகியோர் நடத்தினர். வினாடி வினா மதிப்பீட்டாளர்களாக முனைவர் ந. இராணி, முனைவர் நா. காயத்திரி, பேரா. பா. சரளாதேவி ஆகியோர் செயல்பட்டனர். தாகூர் கலைக்கல்லூரியின் வரலாற்றில் முதன்முறையாக நடத்தப்பெற்ற தொலைக்காட்சி ஒளிபரப்புடன் கூடிய இந்நிகழ்ச்சியில் திரளான மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.


 வினாத்தாள் திறக்கப்படுதல்.
 மாணவ - மாணவியர் தேர்வு எழுதுதல்.
 பார்வையாளர் பகுதியில் ரைட் சேனல் இயக்குநர் திரு. யாசர் அராபத், ரைட் சேனல் நிறுவனர் திரு. அ.மு. சலீம், கல்லூரி முதல்வர் முனைவர் வ. இராமசாமி, பேராசிரியர் முனைவர் கு. ஞானகுரு ஆகியோர். 
வினாடி வினா இயக்குநர் : முனைவர் ஆ. மணி அவர்கள். 

 போட்டி நடைபெற்ற அரங்கு.
 நிகழ்ச்சித் தொகுப்புரை: முனைவர் க. கண்ணன் அவர்கள்.
 வரவேற்புரை: முனைவர் ஆ. விஜயராணி அவர்கள்.
 பார்வையாளர் பகுதியில் முனைவர் தி. தாமரைச்செல்வி, முனைவர் இரா. அகிலா, பேரா. கோவலன், பேரா. முருகன் ஆகியோர்.
 ரைட் சேனல் நிறுவனர் திரு. சலீம் அவர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் வ. இராமசாமி அவர்கள் சிறப்புச் செய்தல்.
 ரைட் சேனல் இயக்குநர் திரு. யாசர் அராபத் அவர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் வ. இராமசாமி அவர்கள் சிறப்புச் செய்தல்.
 கல்லூரி முதல்வர் வ. இராமசாமி அவர்களுக்கு தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் தி. செல்வம் அவர்கள் சிறப்புச் செய்தல். அருகில் கல்லூரிக் கல்வித்துறை இயக்குநர் திரு. த. கரிகாலன் அவர்கள்.
 வினாடி வினா இயக்குநர் முனைவர் ஆ. மணி அவர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் வ. இராமசாமி அவர்கள் சிறப்புச் செய்தல். அருகில் கல்லூரிக் கல்வித்துறை இயக்குநர் திரு. த. கரிகாலன் அவர்கள்.
 தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் தி. செல்வம் அவர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் வ. இராமசாமி அவர்கள் சிறப்புச் செய்தல்.
 சான்றிதழ் வழங்கிச் சிறப்புரை: திரு த. கரிகாலன் அவர்கள் (சிறப்புச் செயலர் / இயக்குநர், உயர்கல்வி & தொழில்நுட்பத்துறை, புதுவை அரசு) 
 வாழ்த்துரை: திரு. அமு. சலீம் அவர்கள் (நிறுவனர், ரைட் சேனல்).
 முதல் பரிசு: தாகூர் கலைக்கல்லூரி மாணவர் திரு கண்ணதாசன் அவர்கள்.
 முதல் பரிசு: தாகூர் கலைக்கல்லூரி மாணவர் திரு லிங்கேஸ்வரன் அவர்கள்.

 இரண்டாம் பரிசு: புதுச்சேரி மொழியியல், பண்பாட்டு ஆய்வு நிறுவன மாணவி.
  இரண்டாம் பரிசு: புதுச்சேரி மொழியியல், பண்பாட்டு ஆய்வு நிறுவன மாணவி.
 சான்றிதழ் பெறும் காரைக்கால் அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்.
  சான்றிதழ் பெறும் காரைக்கால் அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்.
  சான்றிதழ் பெறும்  மாணவ - மாணவியர்.
  சான்றிதழ் பெறும்  மாணவ - மாணவியர்.
நன்றியுரை: முனைவர் ஆ. மணி அவர்கள்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...