சனி, 10 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: இரு வகைப் பிரிவுகளின் நிலை

தொல்காப்பிய அகத்திணை இயல்: இருவகைப் பிரிவுகளின் நிலை

13    இருவகைப் பிரிவும் நிலைபெறத் 1தோன்றலும்
உரிய தாகும் என்மனார் புலவர்.(அகத்.13)

இது, பாலைக்கு உரிய பொருளாம் ஆறு உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): இருவகை பிரிவும் - இருவகைப் பிரிவான தலை மகளைப் பிரிதலும் தலைமகளை உடன்கொண்டு தமர்வரைப் பிரிதலும். 2நிலைபெறத் தோன்றலும் - நிலைபெறத்தோன்றலும். உரியது ஆகும் என்மனார் புலவர் - பாலைக்கு உரிய பொருளாம் என்று கூறுவார் புலவர் (தமர்வரை - தமரை மட்டும்).

உம்மை எச்ச உம்மையாகலான், நிலைபெறத் தோன்றாது பிரிதற்குறிப்பு நிகழ்ந்துழியும் பாலைக்கு உரிய பொருளாம் என்று கொள்க. அதிகாரப்பட்டுவருகின்றது பாலையாகலின், இருவகைப் பிரிவும் பாலைக்குரிய பொருளாயின. (அகத்.13)

குறிப்பு விளக்கம்

(நூற்பா பாடவேறுபாடு): 1. தோன்றினும். (நச்சி.)


2. இருவகைப் பிரிவு : காலிற் பிரிவு, கலத்திற் பிரிவு. கலத்திற் பிரிவு அந்தணர் முதலிய செந்தீவாழ்நர்க்கு ஆகாமையின் வேளாளர்க்கே உரித்தென்றார். வேதவணிகரல்லாதார் கலத்திற் பிரிவு வேதநெறியன்மையின் ஆராய்ச்சியின்று. இக் கருத்தானே இருவகை வேனிலும் நண்பகலும் இருவகைப் பிரிவிற்கு ஒப்ப உரியவன்றிக் காலிற் பிரிவுக்குச் சிறத்தலும் கலத்திற் பிரிவிற்கு இளவேனிலொன்றும் காற்று மிகாத முற்பக்கத்துச் சிறுவரவிற்றாய் வருதலுங் கொள்க. (நச்சி.)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...