வெள்ளி, 9 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: மருதம் முதற்பொருள்

தொல்காப்பிய அகத்திணை இயல்: மருதம் முதற்பொருள்

9    1வைகறை விடியல் மருதம்.(அகத்.9)

இது, மருதத் திணைக்குக் காலம் உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்):வைகறை விடியல் மருதம் - வைகறை விடியலும் மருதத்திற்குக் காலமாம்.

வைகறையாவது இராப்பொழுதின் பிற்கூறு. விடியலாவது, பகற்பொழுதின் முற்கூறு. பருவம் வரைந்தோதாமையின், அறுவகைப் பருவமும் கொள்ளப்படும். இது நெய்தற்கும் ஒக்கும். (அகத். 9)

குறிப்பு விளக்கம்


1. வைகுறு விடியல் (நச்.) கங்குல் வைகிய அறுதியாதல் நோக்கி வைகறை எனவும் கூறுப. (நச்.)

கருத்துகள் இல்லை: