ஞாயிறு, 18 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: உள்ளுறையின் நிலைக்களன்கள்

தொல்காப்பிய அகத்திணை இயல்: உள்ளுறையின் நிலைக்களன்கள்

50. உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலம்எனக்
கொள்ளும் என்ப குறிஅறிந் தோரே. (அகத். 50)

இஃது, உள்ளுறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று,

(இதன் பொருள்): உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை - உள்ளுறையாவது கருப்பொருட்டெய்வம் ஒழிந்த பொருளை, நிலம் என கொள்ளும் என்ப குறி அறிந்தோர் - இடமாகக் கொண்டுவரும் என்று சொல்லுவர் இலக்கணம் அறிந்தோர்.

குறி – இலக்கணம். (அகத். 50).
கருத்துகள் இல்லை: