செவ்வாய், 13 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: காவல் பிரிவுக்கு உரியோர்

தொல்காப்பிய அகத்திணை இயல்: காவல் பிரிவுக்கு உரியோர்

32.மன்னர் பாங்கின் பின்னோர்1 ஆகுப. (அகத். 32)

இது, காவற்பகுதியாகிய முறை செய்வித்தற்கு உரிய மக்களை உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): மன்னர் பாங்கின் -மன்னர்க்குரிய பக்கத்திற்கு, பின்னோர் ஆகுப - (அவ்வாறு முறை செய்தற்கு அரசன் தான் சேறல் வேண்டாமையின், அதற்குரியராய் அவனது ஏவல் வழி வரும்) வணிகரும் வேளாளரும் உரியர் ஆகுப.

மன்னர்க்குரிய பக்கமாவது காவல்; அஃதாவது நெறியின் ஒழுகாதாரை நெறியின் ஒழுகப் பண்ணுதல். (அகத். 32).

குறிப்பு விளக்கம்

1. 'மன்னர் பின்னோர் ' என்ற பன்மையான் முடியுடையோரும், முடியில்லாதோரும் உழுவித்து உண்போரும், உழுது உண்போருமென மன்னரும் வேளாளரும் பலரென்றார்.


"உழுவித்துண்போர் மண்டில மாக்களுள் தண்டத் தலைவருமாய்ச் சோழநாட்டுப் பிடவூரும் அழுந்தூரும் நாங்கூரும் நாவூரும் ஆலஞ்சேரியும் பெருஞ்சிக்கலும் வல்லமும் கிழாரும் முதலிய பதியிற்றோன்றி வேளெனவும் அரசெனவும் உரிமை எய்தினோரும், பாண்டிநாட்டுக் காவிதிப்பட்ட மெய்தினோரும், குறுமுடிக் குடிப்பிறந்தோர் முதலியோருமாய் முடியுடை வேந்தர்க்கு மகட்கொடைக்கு உரிய வேளாளராகுப. " (நச்சி.).

கருத்துகள் இல்லை: