புதன், 14 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: பொருள் ஒழுக்கத்தான் அமையும்

தொல்காப்பிய அகத்திணை இயல்: பொருள் ஒழுக்கத்தான் அமையும்

36. உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக் கத்தான.1 (அகத். 36)

இஃது, அந்தணர் பொருட்குப் பிரியுந்திறன் உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத்தான - உயர்தோராகிய அந்தணர் பொருள்வயிற் பிரியுங்காலத்து ஒழுக்கத்தானே பிரிப.

இதனாற் சொல்லியது, வணிகர்க்கும் வேளாளர்க்கும் வாணிகம் முதலாயின பொருணிமித்தம் ஆகியவாறுபோல, அந்தணர்க்கு இவை பொருணிமித்தம் ஆகா என்பதூஉம், அவர்க்கு இயற்கை யொழுக்கமாகிய ஆசாரமும், செயற்கையொழுக்கமாகிய கல்வியுமே பொருட்குக் காரணமாம் என்பதூஉம் கண்டவாறு. [ஈற்றகரம் சாரியை.] (அகத். 36).

குறிப்பு விளக்கம்

1. இவ்வடியை மேற்சூத்திரத்துடன் இணைத்து ஒன்றாக்கியும், "உயர்ந்தோர்க் குரிய ஓத்தி னான," என்று அவ்வோத்தினை அவரொழுக்கத்திலேயான பொருளென்றும் கூறுவர். (நச்சி.).


கருத்துகள் இல்லை: