வெள்ளி, 9 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: குறிஞ்சி முதற்பொருள்

தொல்காப்பிய அகத்திணை இயல்: குறிஞ்சி முதற்பொருள்

7    1குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர். (அகத்.7)

இது, குறிஞ்சிக்குக் காலம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): குறிஞ்சி - குறிஞ்சித் திணைக்குக் காலமாவது, கூதிர் யாமம் என்மனார் புலவர் - கூதிர்க்காலமும் யாமப்பொழுதும் என்று கூறுவர் புலவர்.

கூதிராவது ஐப்பசித் திங்களும் கார்த்திகைத் திங்களும் யாமமாவதுஇராப்பொழுதின் நடுக்கூறு. (அகத். 7).

குறிப்பு விளக்கம்


1. 6,7, சூத்திரங்களை ஒரே சூத்திரமாக்குவர் நச்சினார்க்கினியர்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...