செவ்வாய், 13 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: வேந்து வினை பிறருக்கும் உரியது

தொல்காப்பிய அகத்திணை இயல்: வேந்து வினை பிறருக்கும் உரியது

34. வேந்துவினை இயற்கை வேந்தன்1 ஒரீஇய
ஏனோர்2 மருங்கினும் எய்திடன் உடைத்தே.(அகத். 34)

இது, வணிகர்க்கும் வேளாளர்க்கும் உரியதோர் பிரிவு உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): வேந்து வினை இயற்கை - வேந்தனது வினை இயற்கையாகிய தூது, வேந்தன் ஒரீஇய ஏனோர் மருங்கினும் - வேந்தனை ஒழிந்த வணிகர்க்கும் வேளாளர்க்கும், எய்து இடன் உடைத்து - ஆகுமிடன் உடைத்து.

   வேந்தனது வினை - வேந்தற்குரிய வினை. ' இடனுடைத்து ' என்றதனான் அவர் தூதாங்காலம் அமைச்சராகிய வழியே நிகழும் என்று கொள்க. [ஏகாரம் ஈற்றசை.]. (அகத். 34).

குறிப்பு விளக்கம்

(பாடவேறுபாடு): 1. வேந்தனின்.


(பாடவேறுபாடு): 2. ஏனோர் - குறுநில மன்னர். (நச்சி.).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...