சனி, 10 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: திணைப்பெயர்கள் அமையும் வகை

தொல்காப்பிய அகத்திணை இயல்: திணைப்பெயர்கள் அமையும் வகை

22.பெயரும் வினையுமென்று ஆயிரு வகைய
திணை தொறும் மரீஇய திணைநிலைப் பெயரே.(அகத்.22)

இதுவும், கருப்பொருளின் பாகுபாடாகிய மக்கட்டிறம் உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): பெயரும் வினையும் என்று அ இருவகைய - குலப்பெயரும் தொழிற்பெயரும் என அவ்விருவகைப்படும், திணைதொறும் மரீஇய திணைநிலைப்பெயர் - திணைதொறும் மருவிப் போந்த திணைநிலைப்பெயர்.


   திணைநிலைப்பெயர் என்றதனான் அப்பெயருடையார் பிறநிலத்து இலர் என்று கொள்ளப்படும். அதனானே எல்லா நிலத்திற்கும் உரியராகிய மேன்மக்களை ஒழித்து நிலம்பற்றி வாழும் கீழ்மக்களையே குறித்து ஓதினார் என்று கொள்க. பெயர் என்றதனால் பெற்ற தென்னை? மக்கள் என அமையாதோ? எனின், மக்களாவார் புள்ளும் மாவும் போல வேறு பகுக்கப் படார். ஒரு நீர்மைய ராதலின் அவரை வேறுபடுக்குங்கால் திணைநிலைப்பெயரான் அல்லது வேறுபடுத்தல் அருமையின், பெயர் என்றார். [சுட்டு நீண்டு நின்றது. ஏகாரம் - ஈற்றசை. திணைநிலப் பெயர் எனவும் பாடம்.]. (அகத். 22)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...