ஞாயிறு, 18 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: முன்னிகழ்வுகள் நினைத்தற்குக் காரணி ஆகும்

தொல்காப்பிய அகத்திணை இயல்: முன்னிகழ்வுகள் நினைத்தற்குக் காரணி ஆகும்

46. நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும். (அகத். 46)

இதுவும் பாலைக்கு நினைத்தற்கு மரபு உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும் - முன்பு நிகழ்ந்தது பின்பு விசாரித்தற்கு ஏதுவும் ஆகும். உம்மை எதிர்மறை.

உதாரணம்:

"வேர்பிணி வெதிரத்துக் கால்பொரு நரலிசை
தந்துபிணி யானை அயாவுயிர்த் தன்ன
என்றூழ் நீடிய வேய்பயில் 1அழுவத்துக்
குன்றூர் மதியம் நோக்கி நின்றுநினைந்து
உள்ளினேன் அல்லனோ யான்முள் எயிற்றுத்
திலகந் தைஇய தேங்கமழ் திருநுதல்
எமது முண்டோர் மதிநாட் டிங்கள்.
உரறுகுரல் வெவ்வளி எடுப்ப நிழறப
உலவை யாகிய மரத்த
கல்பிறங்கு மாமலை உம்பரஃ தெனவே." (நற்றிணை - 62).
(அகத். 46).

குறிப்பு விளக்கம்


1.வேய்பிறங்கு.

கருத்துகள் இல்லை: