வெள்ளி, 9 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: நெய்தல் முதற்பொருள்

தொல்காப்பிய அகத்திணை இயல்: நெய்தல் முதற்பொருள்

10    1எற்பாடு,
நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும். (அகத். 10)

இது, நெய்தல் திணைக்குக் காலம் உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): எற்பாடு - எற்படுபொழுது, நெய்தல் ஆதல் மெய்பெற தோன்றும் - நெய்தற்றிணைக்குக் காலமாதல் பொருண்மை பெறத் தோன்றும்.

எற்பாடாவது பகற்பொழுதின் பிற்கூறு. (அகத். 10)

குறிப்பு விளக்கம்

1. 9,10 சூத்திரங்களை ஒரே சூத்திரமாக்குவர் நச்சினார்க்கினியர்.

கருத்துகள் இல்லை: