புதன், 7 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணையியல் நான்காம் நூற்பா: முதற்பொருளாவது நிலமும் பொழுதும்

தொல்காப்பிய அகத்திணையியல் நான்காம் நூற்பா: முதற்பொருளாவது நிலமும் பொழுதும்

4.    முதல்எனப் படுவது நிலம்பொழு திரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே (அகத். 4)

இது, மேற்சொல்லப்பட்ட மூன்று வகைப் பொருளினும் முதற்பொருள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பு - முதல் என்று சொல்லப்படுவது நிலமும் காலமும் ஆகிய அவ்விரண்டினது இயற்கை, என மொழிப இயல்பு உணர்ந்தோர் -என்று சொல்லுவர் உலகின் இயல்பு உணர்ந்தோர்.

இயற்கை என்பதனால்1செய்துகோடல் பெறாமை அறிந்து கொள்க. நிலம் என்பதனால் பொருள்தோற்றுதற்கு இடமாகிய ஐம்பெரும் பூதமும் கொள்க. [ஏகாரம் ஈற்றசை]. (அகத். 4)

குறிப்பு விளக்கம்


1. (உரைப்பாட வேறுபாடு) : செய்துகோட் பெருமை.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...