சனி, 10 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: திணைப்பெயர்கள் – தலைமக்கள் பெயர்

தொல்காப்பிய அகத்திணை இயல்: திணைப்பெயர்கள் – தலைமக்கள் பெயர்

23.ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப்பெயர்
ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே.(அகத்.23)

இது, நிறுத்தமுறையானே முல்லைக்குரிய மக்கட்பெயர் உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): ஆடூஉ திணைப்பெயர் ஆயர் வேட்டுவர் - ஆண் மக்களைப்பபற்றி வரும் திணைப்பெயர் ஆயர் எனவும் வேட்டுவர் எனவும் வரும். ஆவயின் வரும். கிழவரும் உளர் - அவ்விடத்து வரும் கிழவரும் உளர்.


ஆயர் என்பார் நிரைமேய்ப்பார். வேட்டுவர் என்பவர் வேட்டைத் தொழில் செய்வார். அஃது எயினர் என்னும் குலப்பெயருடையார் மேல் தொழிற்பெயராகி வந்தது. "வந்தது கொண்டு வாராதது முடித்தல் " (மரபு. 112) எனபதனான் ஆய்ச்சியர் எனவும் கொள்க. அவ்விரு திறத்தாரும் காடு பற்றி வாழ்தலின் அந்நிலத்தின் மக்களாயினார். அவ்வயின் வரூஉம் கிழவர் இருவகையர், அந்நிலத்தை ஆட்சி பெற்றோரும், அந்நிலத்து உள்ளோரும் என. 'குறும்பொறைநாடன் ' என்பதுபோல்வன ஆட்சிபற்றி வரும். 'பொதுவன் ஆயன், என்பன குலம் பற்றி வரும். [சுட்டு நீண்டு இசைத்தது. ஏகாரம் ஈற்றசை.]. (அகத். 23)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...