செவ்வாய், 13 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: பொருட் பிரிவுக்கு உரியோர்

தொல்காப்பிய அகத்திணை இயல்: பொருட் பிரிவுக்கு உரியோர்

31.மேலோர் முறைமை நால்வர்க்கும்1 உரித்தே.(கத். 31)

இது, நிறுத்த முறையானே அறம்காரணமாகப் பிரிதற்குரிய தலைமக்களை உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்து- மேலோராகிய தேவரது முறைமையை நிறுத்தற்குப் பிரியும் பிரிவு நான்கு வருணத்தார்க்கும் உரித்து. [ஏகாரம் ஈற்றசை]. (அகத். 31).

குறிப்பு விளக்கம்

1.'மேலோர் முறைமை ஏனோர்க்கும் உரித்தே' என்னாது 'நால்வர்க்கும் உரித்தே' என்றது, முற்கூறிய வணிகரை ஒழிந்த இருவகை வேளாளரையும் கூட்டி என்றுணர்க. (நச்சி.)கருத்துகள் இல்லை: