சனி, 3 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கண, இலக்கிய வரலாறு - 24

இலக்கணம் -  பொருளிலக்கண நூல்கள்

இறையனார் அகப்பொருள் (2 ஆம் நூற்.)

1.         இறையனார் அகப்பொருளாசிரியர்?
இறையனார் (சிவபெருமான் என்பது இந்நூலுரைக் கருத்து).

2.         இறையனார் அகப்பொருளின் வேறு பெயர்?
இறையனார் களவியல்.

3.         இறையனார் களவியல் நூற்பாக்களின் தொகை?
60 நூற்பாக்கள்.

4.         இறையனார் களவியல் நூற்பாக்களின் அடியெல்லை என்ன ?
சிற்றெல்லை சிந்தடி (22 ஆம் நூற்பா) (சிந்தடி - மூன்று சீர்கொண்ட அடி). பேரல்லை 10 அடி (12 ஆம் நூற்பா).

5.         இறையனார் களவியல் உரைகாரர்?
நக்கீரர், (இவருரை 10 தலைமுறைகளாக ஆசிரியர் மாணவர் பரம்பரையில் வழங்கி வந்துள்ளது என்பது இவ்வுரைச் செய்தி).

6.         இறையனார் களவியலுக்குச் சான்றாக விளங்கும் நூல்?
பாண்டிக்கோவை.

கருத்துரையிடுக