செவ்வாய், 20 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 58

இலக்கணம் - நிகண்டுகள்


11.        கைலாச நிகண்டின் ஆசிரியர்?
நூலாசிரியர் கைலாசர். இவர் காலம் 17ஆம் நூற்றாண்டு. (56 பிரிவுகளைக் கொண்ட கைலாச நிகண்டு பிங்கல நிகண்டைத் தழுவிச் செய்யப்பட்டதாகும். கைலாச நிகண்டின் முதல் 49 பிரிவுகள் திவாகர நிகண்டைச் சார்ந்து எழுந்தவை).

12.       பாரதிதீபம் நூலாசிரியர்?
திருவேங்கட பாரதி. பரமானந்த பாரதி என்றும் பெயருண்டு. (கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்த பாரதிதீபம் நிகண்டு 12 தொகுதிகளை உடையது. இவர்காலம் 15ஆம் நூற்றாண்டு; 17ஆம் நூற்றாண்டு எனக் கருத்துக்கள் உள).

13.   ஆசிரிய நிகண்டு பற்றிக் கூறுக?
ஊற்றங்கால் ஆண்டிப்புலவர் இயற்றிய நிகண்டு ஆசிரிய நிகண்டாகும். திவாகரம், பிங்கலம், ரிச்சொல் நிகண்டு. கயாதர நிகண்டு, அகராதி நிகண்டு ஆகியவற்றின் கருத்துக்களைத் தொகுத்து இயற்றப்பட்ட நூல் என்கின்றார் ஆண்டிப்புலவர். ஆசிரிய விருத்தத்தால் 260 பாடல்களைக் கொண்டது. ஆசிரிய நிகண்டு 1975இல் தஞ்சை சரஸ்வதி மகால் நூல் நிலையத்தால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஆண்டிப்புலவரின் காலம் 17ஆம் நூற்றாண்டு. நன்னூலுக்கு ஆசிரிய விருத்தப்பாவில் இவர் உரை கண்டுள்ளார்.

14..      அரும்பொருள் விளக்க நிகண்டு குறிப்புரைக்க?
தில்லை அருமருந்து தேசிகர் இயற்றிய நூல் அரும்பொருள் விளக்க நிகண்டு. முந்தைய நிகண்டு நூற்கருத்துக்களைத் தொகுத்து இந்நூலைச் செய்ததாக இதன் ஆசிரியர்  பாயிரத்தில் கூறியுள்ளார். விருத்தப்பாவில் 739 பாடல்களைக் கொண்டது. நூலின் இறுதிப்பாடலில் இந்நுலைக் கற்போர் சிறந்த புலமையும் செல்வமும் பெற்றுப் பெருமையடைவர் எனக் கூறியுள்ளார். இக்கருத்து வேறு நிகண்டு நூல்களில் இடம்பெறாத கருத்தாகும்.

15.       தொகை நிகண்டின் ஆசிரியர்?
சுப்பிரமணியக் கவிராயர் இயற்றிய நூல் இது. திவாகரத்தில் உள்ள பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி என்ற பிரிவைமட்டும் விளக்குவது இந்நூலாகும். இதன் காலம் 18ஆம் நூற்றாண்டு.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...