திங்கள், 12 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 38

இலக்கணம் - அணியிலக்கணம்


அப்பைய தீட்சிதர் குவலயாநந்தம் (19ஆம் நூற்.)

1.         அப்பைய தீட்சிதர் குவலயாநந்தம் பற்றிக் கூறுக.
வடமொழிச் சந்திராலோகத்திற்கு அப்பையதீட்சிதர் குவலயாநந்தம் என்னும் பெயரிய உரை எழுதினார் (16ஆம் நூற்.). இதனை 1889இல் எட்டையபுர அரசவைப்புலவர் சங்கர நாராயண சாத்திரியார் தமிழில் மொழிபெயர்த்தார். இம்மொழிபெயர்ப்பை எட்டையபுர அரசவைக்கவிஞார் முகவூர் மீனாட்சி சுந்தரக் கவிராயர் தமிழ்ச்செய்யுள் வடிவில் தந்தார். இதன் முதற்பதிப்பு 1895 இல் உ.வே. சீனிவாசாரியார், ஆனூர் சிங்காரவேலு முதலியார் ஆகியோரால் வெளியிடப்பட்டது. இதன் இரண்டாம் பதிப்பு 1976இல் ச.வே. சுப்பிரமணியனால் வெளியிடப்பட்டது. குவலயாநந்தம் கட்டளைக் கலித்துறை யாப்பில் 167 நூற்பாக்களைக் கொண்டது.

2 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

பயனுள்ள இலக்கணக் குறிப்புகள்
முனைவரே..

இவை போன்ற செய்திகளைத் தருவதில் தங்களுக்கு நிகர் தாங்கள் தான்.

தொடர்ந்து பதிவு செய்யுங்கள் முனைவரே.

முனைவர் ஆ.மணி சொன்னது…

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. முனைவர் குணசீலன் அவர்களே.

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...