இலக்கணம் - பாட்டியல் நூல்கள்
பிரபந்தத் திரட்டு (19ஆம் நூற்.)
1. பிரபந்தத் திரட்டின் ஆசிரியர்?
ஆசிரியர் விவரம் தெரிந்திலது. எனினும் இவர் காலம் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் என்பர்.
2. பிரபந்தத் திரட்டின் பாவகை?
வெண்பா. வஞ்சித்துறை. கலித்துறை, வஞ்சிவிருத்தம், கலிவிருத்தம், அகவல் விருத்தம் எனப் பல்வகை யாப்பால் அமைந்தது (பிற பிரபந்த நூல்கள் ஒரு வகைப்பட்ட யாப்பின்).
3. பிரபந்தந்திரட்டின் இயல்கள் தொகை?
பத்து இயல்கள்.
4. பிரபந்தத் திரட்டு கூறும் இலக்கிய வகைகளின் எண்ணிக்கை?
96 வகைகள், (திரட்டியல் என்ற இயலில் கூறப்பட்டுள்ளன. பிற பாட்டியல் நூல்களில் கூறப்படாத 50இக்கும் மேற்பட்ட புத்திலக்கிய வகைகள் இதில் கூறப்பட்டுள்ளன).
5. பிரபந்தத் திரட்டில் மட்டும் கூறப்பட்ட இலக்கியச் சான்றுள்ள வகைகள்?
நொண்டி, சடானனம் ஆகியன.
6. பிரபந்தத்திரட்டு கூறும் நிலவகைகளின் எண்ணிக்கை?
35 வகைகள் (குறிஞ்சி 7 வகை, முல்லை 7 வகை, மருதம் 7 வகை, நெய்தல் 7 வகை, பாலை 7 வகை ஆக 35 வகை).
7. பிரபந்தத் திரட்டின் உரைகாரர்?
பிரபந்தத் திரட்டினை முதன்முதலில் பதிப்பித்தவராகிய அன்னிதாமசு ஆவார்.
8. பிரபந்தத் திரட்டின் முதற்பதிப்பு?
பிரபந்தத் திரட்டின் முதற்பதிப்பு 1980இல் உலகத்தமிழாராய்ச்சி நிறுவன வெளியிடாக வந்துள்ளது. இதனை உரையெழுதிப் பதிப்பித்தவர் அன்னிதாமசு ஆவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக