இலக்கணம் - பாட்டியல் - உரைநடை நூல்கள்
1. பாட்டியல் இலக்கணத்தைக் கூறும் உரைநடை நூல்கள் சிலவற்றைக் கூறுக.
1. வீரமாமுனிவரின் சதுரகராதி (தொகையகராதி என்னும் பகுதியில் சிற்றிலக்கிய வகைகளின் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. 1824இலில் பதிப்பிக்கப்பட்டது.)
2. பொருத்த வினாவிடை (அச்சேறாத நூல்).
3. பூவை, கலியாண சுந்தர முதலியார் எழுதிய செய்யுளிலக்கணம் இந்திய ரூபம் (சாதக்கவி முதலாகச் சிறுகாப்பியம் ஈறாக 96 வகைகள் விளக்கப்பட்டுள்ளன. 1893இல் இந்நூல் வெளியானது).
4. பி.எஸ்.எல். முத்துசுவாமிப்பிள்ளை எழுதிய இலக்கண மணிமாலை (ஐந்திலக்கண நூல் - யாப்பதிகாரத்தில் பாட்டியல் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. பெங்களுரிலிருந்து வெளிவந்த இதன் பதிப்பாண்டு நூலில் இடம்பெறவில்லை).
5. ந.வி. செயராமன் - பாட்டியலும் இலக்கிய வகைகளும் (96 வகைகள் விளக்கப்பட்டுள்ளன. 1981இல் வெளிவந்தது).
2. பாட்டியல் பற்றிப் பேசும் நிகண்டுகள் யாவை?
திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, பொருட்டொகை நிகண்டு, உரிச்சொல் நிகண்டு ஆகியன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக