திங்கள், 12 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 40

இலக்கணம் - பாட்டியல் நூல்கள்


நவநீதப் பாட்டியல் (14ஆம் நூற்.)

1.         நவநீதப் பாட்டியலின் ஆசிரியர்?
நவநீத நடனார்

2.         நவநீதப் பாட்டியலின் வேறுபெயர்?
கலித்துறைப் பாட்டியல் (கட்டளைக் கலித்துறை யாப்பால் அமைந்த நூலாதலின் இப்பெயர் பெற்றது).

3.         நவநீதப்பாட்டியலின் முதல்நூல்?
இந்திரகாளியப் பாட்டியல் வழி, அகத்தியர் பாட்டியல் வழி என இருவழிகளில் பாட்டியல் நூல்கள் வளர்ந்துள்ளன. நவநீதப் பாட்டியல், அகத்தியர் பாட்டியலின் வழி நூலாகும்.

4.         நவநீதப் பாட்டியல் நூலமைதி கூறுக?
பொருத்தவியல், செய்யுள் மொழியியல், பொதுமொழியியல் என மூவியல்களும் 105 பாடல்களும் கொண்டது.

5.         நவநீதப் பாட்டியலின் உரை?
இந்நூலுக்குப் பழைய உரைகள் இரண்டு கிடைத்துள்ளன. அவ்வுரையாசிரியர்களின் பெயர்கள் தெரியவில்லை.

2 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

thanks for sharing...vaalththukkal

முனைவர் ஆ.மணி சொன்னது…

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு. மதுரை சரவணன் அவர்களே.

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...