இலக்கணம் - பாட்டியல் நூல்கள்
பிரபந்த தீபிகை (19ஆம் நூற்.)
1. பிரபந்த தீபிகையின் ஆசிரியர்?
முத்துவேங்கட சுப்பையர் (இவர் தம்நூலின் காலத்தை (1849) எனத் தெளிவாகக் குறித்துள்ளார். பிரபந்ததீபம் என்னும் நூற்பெயரைக் குறித்துள்ளார்).
2. பிரபந்த தீபிகையின் யாப்பு?
விருத்த யாப்பு. (100 விருத்தங்கள் கொண்டது இந்நூல்).
3. பிரபந்த தீபிகையில் கூறப்பட்டுள்ள மங்கலச் சொற்களின் எண்ணிக்கை?
32 மங்கலச் சொற்கள்
4. பிரபந்த தீபிகை கூறும் இலக்கிய வகைகளின் தொகை?
77 இலக்கிய வகைகள்.
5. பிரபந்ததீபிகைக்கு உரை எழுதியோர்?
ச.வே.சுப்பிரமணியன், அன்னிதாமசு ஆகியோர் இணைந்து உரையெழுதி யுள்ளார்.
6. பிரபந்த தீபிகையை (ஒரு பகுதியை மட்டும்) முதன் முதலில் வெளியிட்டவர்?
வேம்பத்தூர் பி. பாங்கரையர் (செந்தமிழ் இதழில் 1919இல் 26 விருத்தங்களை வெளியிட்டுள்ளார்).
7. பிரபந்த தீபிகையை முழுமையாக முதற்கண் பதிப்பித்தோர்?
ச.வே. சுப்பிரமணியன், அன்னிதாமசு ஆகியோர் இணைந்து 1982இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியிடாகப் பதிப்பித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக