ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 28

இலக்கணம் - பொருளிலக்கண நூல்கள்


புறப்பொருள் வெண்பாமாலை (9 ஆம் நூற்.)

1.         வெண்பா யாப்பில் அமைந்த புறப்பொருள் நூல்?
புறப்பொருள் வெண்பாமாலை

2.         புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர்?
ஐயனாரிதனார் .

3.         பன்னிரு படலத்தின் வழிநூல்?
புறப்பொருள் வெண்பாமாலை.

4.  நூற்பா, நூற்பாவின் விளக்கமாகிய கொளு, கொளுவிற்கு எடுத்துக்காட்டு என்ற முறையில் அமையும் நூல்?
புறப்பொருள் வெண்பாமாலை

5.         புறப்பொருள் வெண்பாமாலை கூறும் புறத்திணைகள்?
12

6.         புறப்பொருள் வெண்பாமாலைக் கொளு, சான்றுப் பாடல்கள் எத்தனை?
கொளு 341. சான்றுப் பாடல்களில் 341 வெண்பாக்களும் 20 மருட்பாக்களுமாக 361 பாக்கள் உள்ளன.

7.         வெண்பா மாலை கூறும் புறத்திணைகள், புறப்புறத்திணைகள் யாவை?
வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை ஆகிய ஏழும் புறத்திணைகள். வாகை, பாடாண், பொதுவியல் ஆகிய மூன்றும் புறப்புறத்திணைகளாம்.

8.         புறப்பொருள் வெண்பாமாலை உரைகாரர்?
சாமுண்டி தேவநாயகர் (இவருரை பொழிப்புரையாகும்).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...