இலக்கணம் - நிகண்டு நூல்கள்
21. கந்தசுவாமியம் பற்றிக் கூறுக?
கீழ்வேளுர் சுப்பிரமணிய தேசிகர் முந்தைய நிகண்டு நூற்செய்திகளைத் தொகுத்து நூற்பா நடையில் கந்தசுவாமியம் என்ற நிகண்டினை இயற்றினார். இந்நூல் இரு தொகுதிகளாக 1844இலில் வெளிவந்தது. முதல் தொகுதியில் 1318 சொற்களும் இரண்டாம் தொகுதியில் 1425 சொற்களும் விளக்கப்பட்டுள்ளன. இந்நூலின் காலம் 19ஆம் நூற்றாண்டு.
22. தொகைப்பெயர் விளக்கத்தை இயற்றியவர்?
வேதகிரி முதலியார் (இவர் காலம் 19ஆம் நூற்றாண்டு. பல்பொருள் கூட்ட ஒரு பெயர்த் தொகுதி மட்டும் இடம்பெற்றுள்ளது 1849இல் இந்நூல் வெளிவந்துள்ளது).
23. நாநார்த்த தீபிகை நிகண்டின் ஆசிரியர்?
முத்துசாமிபிள்ளை (விருத்தப்பாவில் அமைந்தநூல் நாநார்த்த தீபிகை நிகண்டாகும். காலம். 19ஆம் நூற்றாண்டு).
24. சிந்தாமணி நிகண்டின் நூலாசிரியர்?
வைத்தியலிங்கம் பிள்ளை (எதுகை முறையில் ஒருசொல் பல்பொருள் பெயர்த்தொகுதிக்கு மட்டும் விளக்கம் கூறுகின்றது. நூலாசிரியரே உரையெழுதிப் பதிப்பித்துள்ளார்).
25. அபிதானத் தனிச்செய்யுள் சிந்தாமணியின் ஆசிரியர்?
கோபாலசாமி நாயர். (இந்நிகண்டின் காலம் 19ஆம் நூற்றாண்டு).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக