சனி, 24 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 65

இலக்கணம் - நிகண்டு - அகராதிகள்


35.       20ஆம் நூற்றாண்டில் வெளிவந்த குறிபிடத்தக்க அகராதிகள் யாவை?
வ.  எண்  -அகராதியின் பெயர்       -தொகுத்தவர்        -பதிப்பாண்டு (குறிப்பு)
1.         அபிதான கோசம் அ. முத்துத் தம்பிப்பிள்ளை 1902. 
2.        நா. கதிரைவேற்பிள்ளை அகராதி  நா. கதிரைவேற்பிள்ளை     இரண்டாம் பதிப்பு: 1901 (தமிழ்ப்பேரகராதி எனப்படும். மாணிப்பாய் அகராதியின் விரிவு இவ்வகராதி).
3.     தமிழ்ச்சொல்லகராதி   சி. டபிள்யூ. கதிரைவேற் பிள்ளை காலம் 1904 -1923. (மூன்று தொகுதிகளும் 63900 சொற்களும் 1800 பக்கங்களும் கொண்ட இவ்வகராதி சங்க அகராதி, தமிழ்ச்சங்க அகராதி எனவும்படும்).  
4.         தமிழ்ப் பேரகராதி த. குப்புசாமி நாயுடு  1906இல் வெளியானது. (நான்கு பகுதிகளைக் கொண்டது).   
5.         சிறப்புப் பெயரகராதி   ஈக்காடு இரத்தினவேலு முதலியார்            காலம் 1908.          
6.         இராமநாதன் தமிழ் அகராதி  பி. இராமநாதன்  1909 (நான்கு தொகுதிகளைக் கொண்ட இவ்வகராதியில் சில இயல்களில் படங்களும் உள்ளன. இவ்வகையில் இதுவே முதல் அகராதியாகும்).
7.         அபிதான சிந்தாமணி  ஆ. சிங்காரவேலு முதலியார்    முதற்பதிப்பு 1910 (தமிழின் முதற்கலைக்களஞ்சியம் இதுவாகும்).  
8.         காரனேஷன் தமிழ் அகராதி  நாகலிங்கமுதலியார்      1911 (நா.கதிரைவேற் பிள்ளையின் விரிவு இவ்வகராதி).
9.  சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேரகராதி வையாபுரிப்பிள்ளை (பதிப்பாசிரியர்)            முதல் தொகுதியின் முதல் பகுதி 1924 இல் வெளியானது. ஏழு தொகுதிகளைக் கொண்டது. மொத்தம் 1,24,405 பதிவுகளுடையது. தமிழ் - ஆங்கிலம் - தமிழ் அகராதியாகிய இதன் சுருக்கம் 1955 இல் வெளியானது.  
10.       ஜீபிலி தமிழ்ப் பேரகராதி    நெல்லை எஸ். சங்கரலிங்க முதலியார் காலம் 1935. 1386 பக்கங்களுடையது.    
11.        ஆனந்தவிகடன் அகராதி     தொகுத்தவர் தெரியவில்லை காலம் 1935. 2040 பக்கங்களுடையது     .
12.   மதுரைத் தமிழ்ப்பேரகராதி   பலர்   1937இல் வெளியானது வெளியிட்டவர்: மதுரை கோபாலக்கிருஷ்ணக்கோன். 
13.       சொற்பிறப்பு, ஒப்பியல் தமிழ் அகராதி    இலங்கை ஞானப்பிரகாச அடிகள்  காலம் 1939- 46. தமிழ்ச்சொற்பிறப்பியல், ஒப்பியல் துறையில் வெளிவந்த முதல் அகராதி இது.    
14.       கலைக்களஞ்சியம்     பெரியசாமி தூரன் (பதிப்பாசிரியர்)    காலம் 1954 – 67. (பத்துத் தொகுதிகளுடைய இதுவே முறையான முதல் கலைக்களஞ்சியமமாகும். தமிழ் வளர்ச்ச்சிக் கழகம் வெளியிட்டது).
15.       குழந்தைகள் கலைக்களஞ்சியம்   பத்துத் தொகுதிகளுடையது. தமிழ் வளர்ச்சிக்கழகம் வெளியிட்டது.   
16.   தமிழ் - ருஷ்ய அகராதி  1960இல் வெளியானது. 38000 பதிவுகளுடையது. மாஸ்கோவிலிருந்து வெளியிடப்பட்டது.
17.       ருஷ்ய - தமிழ் அகராதி          1965இல் வெளியானது. 24000 பதிவுகளுடைய இதுவும் மாஸ்கோவிலிருந்து வெளியிடப்பட்டது.   
18.       ஆங்கிலம் - தமிழ் அகராதி  அ. சிதம்பரநாதன் (பதிப்பாசிரியர்) மூன்று தொகுதிகளுடையது. முறையே 1963,1964, 1965ஆம் ஆண்டுகளில் வெளிவந்தது.
19.   திராவிடச் சொற்பிறப்பியல் அகராதி      பரோ, எமனோ. இரண்டு தொகுதிகள். முறையே 1961, 1968 -களில் வெளியானது. மொத்தம் 5461 சொற்கள் உள.     
20.      திருக்குறள் சொல்லடைவு.  சாமி. வேலாயுதம் பிள்ளை. -   
21.       சங்க இலக்கியச் சொற்களஞ்சியம் தண்டபாணிதேசிகர் உயிர் எழுத்துக்களுக்கு வந்துள்ளது. மூன்று தொகுதிகளுடையது. முறையே 1967, 1968, 1970-களில் வெளியானது).  
22.       புறநானூற்றுச் சொல்லடைவு வி.ஐ. சுப்பிரமணியம் காலம் 1962            .
23.       பதிற்றுப்பத்து சொல்லடைவு எஸ். அகத்தியலிங்கம் காலம் 1962.
24.      பழந்தமிழ் நூற்சொல்லடைவு      புதுவை பிரெஞ்சிந்திய கலைக்கழகம் வெளியிட்டது.  
25.       சிலப்பதிகார அகராதி  ச.வே. சுப்பிரமணியம்  -  
26.      அகநானூற்று அகராதி ச.வே. சுப்பிரமணியன் காலம் 1972.          
27.       குறுந்தொகைச் சொல்லடைவு     எம். எஸ்.ஆர். கிருட்டிணம்மாள்    காலம் 1974.           
28.       ஐங்குறுநூற்றுச் சொல்லடைவு கலியபெருமாள். -           
29.      சங்கஇலக்கியப் பொருட்களஞ்சியம் மூன்று தொகுதிகள் வந்துள. அவைமுறையே 1986, 1988 ஆம் ஆண்டுகளில் வெளிவந்துள்ளன. சங்க இலக்கியப்பெயர்ச் சொற்கள் மட்டும் இடம்பெற்றுள்ளன.  
30.      சங்க இலக்கியச் சொற்றொகை    தாமஸ் லேமன்& தாமஸ் மால்டின். ஜெர்மனியில் 1992 இல் வெளிவந்த இதன் முதல் இந்தியப்பதிப்பை 1993 இல் சென்னை ஆசியவியல் ஆய்வு நிறுவனம் வெளியிட்டது.
31.       பல்லவர்க்கு முற்பட்ட தமிழ்ச் சொல்லடைவு  என். சுப்பிரமணியன்   1996இல் சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டது.

1 கருத்து:

stalin wesley சொன்னது…

இலக்கண தொடர் முழுவதும் சூப்பர் சார் ....

பகிர்வுக்கு நன்றி


கூகுளில் பேசி தேடலாம்