புதன், 14 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 46

இலக்கணம் - பாட்டியல் நூல்கள்


தொன்னூல் விளக்கம் (பாட்டியல்) (18ஆம் நூற்.)

1.         தொன்னூல் விளக்கத்தின் ஆசிரியர்?
வீரமாமுனிவர்.

2.         தொன்னூல் விளக்கப் பகுப்புகள்?
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கணப் பகுப்பு.

3.         பாட்டிலக்கணம் கூறும் பகுப்பு?
யாப்பதிகாரம் - செய்யுள் மரபியல்.

4.         தொன்னூல் விளக்கம் கூறும் இலக்கிய வகைகள்?
நூலால் 38 இலக்கிய வகைகளும் உரையால் 58 வகைகளும் அறியப்பட்டுள்ளன.

5.         தொன்னூல் விளக்கத்தின் முதற்பதிப்பு வெளிவந்த ஆண்டு?
களத்தூர் வேதிகிரி முதலியாரால் பார்வையிடப்பட்டு, 1838இல் புதுவையில் இதன் முதற்பதிப்பு அச்சிடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...